உணவகங்களில் பால் தேநீர் விலை குறைக்கப்படும் என உணவக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் முதல் இந்த விலைக்குறைப்பு அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரலில் பால் மா வின் விலை குறைக்கப்படுமென பால் மா இறக்குமதியாளர்கள் அறிவித்துள்ள நிலையில், பால் தேநீரின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தற்போது 100 ரூபாவாக விற்கப்படும் பால் தேநீர், ஏப்ரல் முதல் 90 ரூபாவாக குறையவுள்ளது.