Tuesday, July 15, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டு17 மாணவர்களின் தலைமுடியை வெட்டி பரீட்சைக்கு அனுமதிக்க மறுப்பு

17 மாணவர்களின் தலைமுடியை வெட்டி பரீட்சைக்கு அனுமதிக்க மறுப்பு

கம்பளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 17 மாணவர்களின் தலைமுடியை வெட்டி, அவர்களை பரீட்சைக்கு தோற்றுவதற்கு இடமளிக்காமல் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இவ்வருடம் கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களே இச்சம்பவத்துக்கு முகம் கொடுத்துள்ளனர்.

22 ஆம் திகதி புதன்கிழமை காலை 8.30 மணியளவில் பருவத்தேர்வு தொழில்நுட்ப பாட பரீடசைக்கான விடைகளை எழுதும் முன்னர் பாடசாலை அதிபர், பிரதி அதிபர் ஆகியோர் மாணவர்களின் தலைமுடி நீளமாக வளர்ந்துள்ளதால் தலைமுடியை வெட்ட நடவடிக்கை எடுத்தனர்.

தலைமுடியை வெட்டிய பின்னர் அந்த மாணவர்கள் பரீட்சைக்கு அனுமதிக்கப்படாமல் பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதையடுத்தே குறித்த சம்பவம் தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்படத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles