Thursday, January 16, 2025
24.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவர்கள் சடலங்களாக மீட்பு

நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவர்கள் சடலங்களாக மீட்பு

ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகொட பகுதியில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் அமைந்துள்ள நீர் வடிந்தோடும் வடிகானிலிருந்து 10 மற்றும் 8 வயதுடைய இரு சிறுவர்கள் நேற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இவர்களில் 8 வயதுடைய சிறுவனின் சடலம் நேற்றிரவு மீட்கப்பட்டதுடன், 10 வயதுடைய சிறுவனின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டது.

உயிரிழந்த சிறுவர்கள் இருவரும் போகொட வித்தியாலயத்தில் தரம் 5 மற்றும் தரம் 2 இல் கல்வி கற்கும் சகோதரர்கள் ஆவர்.

சிறுவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles