டுபாயில் தங்கியிருந்து இந்த நாட்டில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் 06 பேர் பூரு மூனாவுடன் தொடர்பு வைத்திருந்ததாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாதாள உலகத்தின் துப்பாக்கி சூடு நடத்துபவரான பூரு மூனா எனப்படும் ரவிந்து சங்க டி சில்வா தற்போது 90 நாட்களாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
வெளிநாடுகளிலோ அல்லது இலங்கையிலோ செயற்படும் ஏனைய குற்றக் கும்பல்களுடன் பூரு மூனாவுக்கு தொடர்பு உள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
போதைப்பொருள் பணத்தை பெற்றுக்கொள்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டில் உள்ள கடத்தல்காரர்கள் பூரு மூனாவின் உதவியை நாடியுள்ளனர்.
எவ்வாறாயினும், தென்மேற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.