அரச அச்சகத்தின் ஆண்டுச் செலவுக்கு சுமார் 4000 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக அரச அச்சக மா அதிபர் கங்கானி கல்பானி லியனகே தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் முதல் அச்சக துறைக்கு திட்டமிட்டபடி பணம் கிடைக்கவில்லை என்றும், அச்சகத் துறை ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்க மட்டுமே பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தேர்தல் செலவுக்காக முதலில் கிடைத்த 40 மில்லியன் தவிர இதுவரை பணம் கிடைக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
தேர்தலுக்கு தேவையான அச்சுப் பணிகளுக்கு சுமார் 533 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக தெரிவித்த அவர்இ அத்தொகையில் சுமார் 200 மில்லியன் ரூபாவை கோரியதாகவும் தெரிவித்தார்.
ஆனால் தேர்தல் ஆணைக்குழுவால் அந்த தொகையை வழங்க முடியவில்லை என்றும் அவர் கூறினார்.