Tuesday, May 19, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிவசாயிகளுக்கு நிவாரண நிதிக் கொடுப்பனவு

விவசாயிகளுக்கு நிவாரண நிதிக் கொடுப்பனவு

குறைந்த வருமானம் பெறும் விவசாய குடும்பத்திற்கு சிறுபோகத்திற்காக தலா 30 ஆயிரம் ரூபா நிதி நிவாரண கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஒத்துழைப்புக்கான அமெரிக்க முகவரகத்தின் உதவி திட்டத்தின் கீழ் இந்த நிவாரண நிதி கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய 06 மாவட்டங்களிலுள்ள குறைந்த வருமானம் பெறும் 48 ஆயிரம் விவசாய குடும்பங்களுக்கு இரண்டு தவணைகளில் தலா 15 ஆயிரம் ரூபா வழங்கடவுள்ளதாகவும் விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, ஆகிய மாவட்டங்களில் ஒரு ஏக்கருக்கும் குறைவான விவசாய நிலங்களை கொண்ட நெற்செய்கையாளர்கள் இந்த திட்டத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles