இலங்கையில் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தடையை நீக்குமாறு சர்வதேச நாணய நிதியம் உத்தரவிட்டதன் காரணமாக தடை செய்யப்பட்ட 101 வகையான பொருட்களை மீண்டும் இலங்கைக்குக் கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் உப்பு, பல்வேறு வகையான இறைச்சி, செப்பு, இதர உலோகங்கள், கேக், பிளாஸ்டிக், சீஸ், இறப்பர், மரச்சாமான்கள், சோப்புகள், காய்கறிகள், கார்கள் உள்ளிட்ட பொருட்கள் மீண்டும் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.
டொலர் நெருக்கடியால் உப்பு இறக்குமதி நிறுத்தப்பட்டு கடந்த காலங்களில் சீனாவிலிருந்து அதிகளவில் உப்பு இறக்குமதி செய்யப்பட்டது.