தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலைகள் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் பெறப்பட்ட மரக்கறிகளை கொள்வனவு செய்ய வர்த்தகர்கள் வராத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களுடன் ஒப்பிடுகையில் மரக்கறிகளின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், இதன்காரணமாக விவசாயிகள் உற்பத்திச் செலவை ஈடுகட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் உருளைக்கிழங்கு, சிவப்பு வெங்காயம், பெரிய வெங்காயம் போன்றவற்றின் விலைகள் அதிகளவில் வாடிக்கையாளர்கள் இல்லாததால் விலை குறைந்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.