Monday, November 18, 2024
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலை அத்தியாவசிய சேவையாக்கப்படும்!

பாடசாலை அத்தியாவசிய சேவையாக்கப்படும்!

பாடசாலைகளின் பிரச்சனைகளை கலந்துரையாடல் மூலம் விரைவில் தீர்க்காவிட்டால் பாடசாலைகளை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நேரிடும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் மாணவர்களை பல்வேறு குழுக்களின் பணயக் கைதிகளாக வைத்திருக்க இடமளிக்கமுடியாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு கலந்துரையாடல் மூலம் விரைவில் தீர்வு காண முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

கொழும்பு சங்கமித்தா மகளிர் கல்லூரியில் இன்று பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைத் துணிகள் வழங்கும் தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்திருந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles