Tuesday, August 5, 2025
26.1 C
Colombo
செய்திகள்உலகம்நியூ ஜெர்சி தேவாலயம் தீக்கிரையானது

நியூ ஜெர்சி தேவாலயம் தீக்கிரையானது

அமெரிக்காவின், நியூ ஜெர்சியில் அமைந்துள்ள தேவாலயம், கடந்த 20 ஆம் திகதி ஏற்பட்ட தீ விபத்தினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

நியூ ஜெர்சியின், புளோரன்ஸ் டவுன்ஷிப்பில் அமைந்துள்ள “The Fountain of Life Center” என்ற தேவாலயமே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.

150க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்த போராடினர்.

உள்ளூர் நேரப்படி அன்றைய தினம் மாலை 6 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தீ விபத்துக்கான காரணம் தெளிவில்லாத நிலையில், இது தொடர்பான விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles