ஜப்பானில் தொழில்வாய்பினை பெற்றுத்தருவதாக தெரிவித்து நாட்டின் பல பகுதிகளில் நிதி மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கடுகன்னாவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை தொடர்ந்தே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் தொடர்பில் 20 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
41 வயதுடைய பிலிமத்தலாவ பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜப்பானில் தொழில் வாய்ப்பினை பெற்றுத்தருவதாக தெரிவித்து 14 இலட்சம் ரூபா முதல் 25 இலட்சம் ரூபா வரை பொது மக்களிடம் பெற்றுக்கொண்டுள்ளார்.
இதுவரையில் குறித்த நபர் இரண்டு கோடிக்கும் அதிகமாக நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளார் எனவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.