Wednesday, August 20, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்திய மீனவர்கள் 12 பேர் கைது

இந்திய மீனவர்கள் 12 பேர் கைது

யாழ்ப்பாணம் – நெடுந்தீவுக்கு அருகில், எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 12 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, இரண்டு படகுகளும் மீட்கப்பட்டுள்ளன.

தமிழகத்தின் புதுக்கோட்டை – ஜெகதாபட்டினத்தில் இருந்து மீன்பிடிக்காக கடலுக்கு சென்ற மீனவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்பாணம் மயிலட்டி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles