Tuesday, June 23, 2026
24.5 C
Colombo
செய்திகள்உலகம்இந்தியாவிலும் நில அதிர்வு

இந்தியாவிலும் நில அதிர்வு

ஆப்கானிஸ்தானில் நேற்று ஏற்பட்ட நிலஅதிர்வை அடுத்து, வட இந்தியாவின் சில பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைத்தொடரை மையமாகக் கொண்ட பகுதிகளில், றிக்டர் அளவுகோளில், 6.5 மெக்னிடியூட்டாக நில அதிர்வு பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையம், தரைமட்டத்திலிருந்து சுமார் 184 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானை தொடர்ந்து பாகிஸ்தான், தஜிகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும், வட இந்திய மாநிலங்களான டெல்லி, பஞ்சாப், காஷ்மீர், அரியானா உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் இரவு 10.22 அளவில், நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.

இந்த நில அதிர்வால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles