Monday, March 16, 2026
25.6 C
Colombo
செய்திகள்உலகம்ஆப்கான் – பாகிஸ்தான் நிலநடுக்கம்: 11 பேர் பலி

ஆப்கான் – பாகிஸ்தான் நிலநடுக்கம்: 11 பேர் பலி

வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் நேற்று (21) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 11 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் பல முக்கிய நகரங்கள் மற்றும் இந்தியத் தலைநகர் புது டெல்லி வரை இந்த நில நடுக்கம் உணரப்பட்டது.

6.5 மெக்னிடியூட் அளவிலான இந்த நிலநடுக்கமானது வடக்கு ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் நகரங்களில் வசிக்கும் மக்களை அவர்களது வீட்டிலிருந்து வெளியேறச் செய்தது.

மேலும் நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் சேதமாகியுள்ளன.

இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தான் நகரமான ஜுர்மில் இருந்து தென்கிழக்கே 40 கிலோமீட்டர் (24 மைல்) தொலைவில் இந்து குஷ் மலைத்தொடரில் 187.6 கிலோமீட்டர் (116 மைல்) ஆழத்தில் பதிவாகியுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles