Monday, March 16, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுருஹூணு பல்கலை விவகாரம்: இரு மாணவர்கள் கைது

ருஹூணு பல்கலை விவகாரம்: இரு மாணவர்கள் கைது

ருஹுணு பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதலில் ஈடுபட்ட இரு மாணவர்கள் இன்று காலை கம்புருபிட்டிய பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 26 ஆம் திகதி இரவு விடுதி காப்பாளருக்கும் கம்புருபிட்டிய தொழில்நுட்ப பீட மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக விடுதி காப்பாளர் மாணவர்களால் தாக்கப்பட்டார்.

பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த இரண்டு மாணவர்களும் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த பீடத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று (21) கொட்டவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles