Tuesday, November 19, 2024
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரணில் இல்லாவிட்டால் இன்று இலங்கை இருந்திருக்காது - டயனா புகழாரம்

ரணில் இல்லாவிட்டால் இன்று இலங்கை இருந்திருக்காது – டயனா புகழாரம்

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்காமல் இருந்திருந்தால், இலங்கையை இன்று கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு வலுப்பெறுவதற்கு மூலோபாய நடவடிக்கைகளே காரணம் என்று சில கபட அரசியல்வாதிகள் கூறினாலும், டொலரின் தேவை மற்றும் விநியோகத்தால் ரூபாவின் மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது என்பதே யதார்த்தம் என்றும் அவர் கூறினார்.

பெரும்பான்மையான தொழிற்சங்கவாதிகள் இந்த நாட்டில் ஒருபோதும் தலை தூக்க மாட்டார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க நாட்டைக் கைப்பற்றவில்லையென்றால், இன்று இலங்கையை உலக வரைபடத்தில் கூட காண முடியாது என அவர் கூறினார்.

ரணில் நாட்டைப் பொறுப்பேற்ற போது அத்தியாவசிய சேவைகளான எண்ணெய், எரிவாயு மற்றும் மின்சார விநியோகங்கள் முற்றாகத் தடைப்பட்டிருந்ததையும் அவர் நினைவு கூர்ந்தார்.

அவர் நாட்டைப் பொறுப்பேற்றது முதல், அந்தச் சிக்கல் நிலைகளில் இருந்து விடுபட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles