Wednesday, June 18, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டு'மொரட்டுவ குடு ராணி' கைது

‘மொரட்டுவ குடு ராணி’ கைது

வெளிநாட்டிலிருந்து போதைப்பொருள் வர்த்தகத்தை நடத்தி வரும் ரத்மலானே தேவிந்த என்ற நபரின் முக்கிய பங்காளியாக கருதப்படும் பெண்ணொருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

அவர் ‘மொரட்டுவே குடு ரெஜின’ ( மொரட்டுவ குடு ராணி) என்று அழைக்கப்படுவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

மொரட்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரட்டுவெல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 49 வயதுடைய குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 05 கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles