Sunday, June 15, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரெய்ட் அமேசன்ஸுக்காக 200 வெளிநாட்டு பெண்கள் இலங்கைக்கு

ரெய்ட் அமேசன்ஸுக்காக 200 வெளிநாட்டு பெண்கள் இலங்கைக்கு

ரெய்ட் அமேசன்ஸுக்காக 200 வெளிநாட்டு பெண்கள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர்.

ரெய்ட் அமேசன்ஸ் மகளிர் சாகச விளையாட்டு விழா, நேற்று கண்டியில் ஆரம்பமானதுடன் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் பங்குபற்றும் 200 பெண்கள் அடங்கிய குழுவினர், பிரான்சில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விசேட விமானம் மூலம் இலங்கைக்கு வந்துள்ளனர்.

ரெய்ட் அமேசன்ஸ் என்பது பிரான்சில் இருந்து தொடங்கப்பட்ட ஒரு வருடாந்திர சாகச நிகழ்வாகும். இதன் 21 ஆவது பதிப்பு இலங்கையில் நடைபெறுகிறது.

இதில் பெண் தடகள வீராங்கனைகள் மலையேற்றம், மலை தொடர் துவிச்சக்கரவண்டியோட்டம், படகோட்டம், ஓட்டப்போட்டி மற்றும் வில்வித்தை போன்ற பல்வேறு சகாசப் போட்டிகளில் ஈடுபடவுள்ளனர்.

இலங்கையின் சுற்றுலாத்துறையை மீட்டெடுக்கும் மற்றுமொரு முயற்சியாக இந்த நிகழ்வுகள் இம்முறை இலங்கையில் நடத்தப்படுவதாக ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles