Friday, January 23, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபூனாகலை மண்சரிவு: சிக்குண்டவர்கள் பாதுகாப்பாக மீட்பு

பூனாகலை மண்சரிவு: சிக்குண்டவர்கள் பாதுகாப்பாக மீட்பு

பண்டாரவளை – பூனாகலை – கபரகலை பகுதியில் நெடுங்குடியிருப்பொன்றின் மீது நேற்றிரவு மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த அனர்த்தத்தில் காயமடைந்த 7 பேர் கொஸ்லாந்தை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இரண்டு நெடுங்குடியிருப்புகளில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், குறித்த மண்சரிவில் சிக்குண்டவர்களை பிரதேச மக்களும், அனர்த்த முகாமைத்துவ பிரிவினரும் இணைந்து பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

குறித்த அனர்த்தத்தில் எவருக்கு உயிர் ஆபத்து ஏற்படவில்லை.

பாதிக்கப்பட்டுள்ள 64 குடும்பங்களை சேர்ந்த 200க்கும் அதிகமானோர் பூனாகலை இலக்கம் 3 தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த அனர்த்தம் தொடர்பில், பாதிக்கப்படோர் எமது செய்தி சேவைக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles