Sunday, August 10, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதுப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் ஒருவர் சடலமாக மீட்பு

துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் ஒருவர் சடலமாக மீட்பு

பொத்துஹெர – கந்தேவத்த பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்ட சடலமொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கஹவத்த – பனாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே நேற்று இவ்வாறு உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இவர் ஐந்து நாட்களுக்கு முன்னர் மொரகொல்ல வத்தை என்ற பகுதியில் தொழிலாளியாக சென்றவர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, சடலம் மீட்கப்பட்ட இடத்துக்கு அருகிலுள்ள கந்தேவத்த வனப்பகுதியிலிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிமருந்து துப்பாக்கியொன்றையும் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles