ஒரு கிலோ திரவ முட்டைக்கு விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியை 200 ரூபாவாக அரசாங்கம் குறைத்துள்ளது.
இது கடந்த சனிக்கிழமை (18) முதல் அமுலுக்கு வருவதாகவும், கேக் மற்றும் பேக்கரி உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடும் எவரும் திரவ முட்டைகளை இறக்குமதி செய்ய முடியும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
முட்டை விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணிகளின் அடிப்படையில் இலங்கைக்கு திரவ முட்டை மற்றும் முட்டை தூள் இறக்குமதி செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் அமைச்சில் அண்மையில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் இந்த வரிச் சலுகை வழங்க தீர்மானிக்கப்பட்டது.
அதிக வரிச்சுமை காரணமாக இலங்கைக்கு திரவ முட்டைகள் இறக்குமதி செய்யப்படவில்லை எனவும்இ இந்த வரிச்சலுகையுடன், திரவ முட்டைகளை உடனடியாக இறக்குமதி செய்வதற்கு தேவையான பணிகளை பேக்கரி உற்பத்தியாளர்கள் முன்னெடுத்து வருவதாகவும் அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர் சங்க உறுப்பினர் உமங்க விதானகே தெரிவித்துள்ளார்.