கடந்த இரண்டு வாரங்களில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவில் சில ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டது.
எனினும் , டொலர் நெருக்கடி தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் அத்தியாவசியத் துறைகளுக்கு போதுமான அந்நியச் செலாவணி கையிருப்பு இருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிணை எடுப்புப் பொதியின் வரவிருக்கும் ஒப்புதல் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் அதேவேளை நாட்டிற்கு அதிக முதலீடுகளை ஈர்க்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார் .