Sunday, November 17, 2024
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுடு சலிந்துவின் உயிர் பாதுகாப்பு தொடர்பான நீதிமன்றின் உத்தரவு

குடு சலிந்துவின் உயிர் பாதுகாப்பு தொடர்பான நீதிமன்றின் உத்தரவு

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ள சலிது மல்ஷிக குணரத்ன என்றழைக்கப்படும் குடு சலிந்துவின் தாயாரால் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க சட்டமா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று கால அவகாசம் வழங்கியுள்ளது.

இதன்படி, ஏப்ரல் 4ஆம் திகதிக்கு முன்னர் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles