Friday, March 27, 2026
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகார் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து: ஒருவர் பலி

கார் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து: ஒருவர் பலி

பசறை 13 ஆம் கட்டை பகுதியில் கார் ஒன்று சுமார் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று (20) காலை 7.20 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 39 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

ஹொப்டன் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராக கடமையாற்றும் குறித்த நபர் இன்று காலை பாடசாலைக்கு செல்ல தயாராகி தனது காரை வீட்டிலிருந்து வெளியே செலுத்திய வேளையில், அது அருகிலிருந்த பள்ளத்தின் ஊடாக பசறை-பிபிலை பிரதான வீதியில் விழுந்ததில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது குறித்த ஆசிரியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது பசறை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles