Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டு14 இலட்சம் பெறுமதியான நகைகளை திருடிய பணிப்பெண் கைது

14 இலட்சம் பெறுமதியான நகைகளை திருடிய பணிப்பெண் கைது

சிலாபம் பகுதியில் ஓய்பெற்ற பொலியியலாளரின் வீட்டிலிருந்து சுமார் 14 இலட்சம் தங்க நகைகளை திருடிய இருவரை சிலாபம் தலைமையக பொலிஸ் குற்றப்புலானாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குறித்த வீட்டில் பணிப்புரிந்து வந்த பெண்ணொருவரும், நகைகளை திருடி விற்பனை செய்ய உதவி புரிந்த நபருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான இருவரும் சிலாபம்-லங்சியாவத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

75 வயதான ஓய்வு பெற்ற பொறியாளர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இந்த வீட்டில் வசித்து வருவதாகவும், சில மாதங்களுக்கு முன்பிருந்து அந்த வீட்டில் குறித்த பணிப்பெண் பணியமர்த்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

வீட்டில் பணிபுரியும் போது, ​​தங்க ஆபரணங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களை அவதானித்துள்ள சந்தேகநபர், இரண்டு தடவைகளில் 14 இலட்சம் பெறுமதியான தங்க ஆபரணங்களை திருடியது விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

அதற்கமைய, பிரதான சந்தேகநபரான பணிப்பெண் மற்றும் அவருக்கு உதவிய நபரையும் எதிர்வரும் 17ஆம் திகதி சிலாபம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles