Monday, January 19, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாக்குச்சீட்டு அச்சிடுவதற்கு நிதி இன்னும் கிடைக்கவில்லை!

வாக்குச்சீட்டு அச்சிடுவதற்கு நிதி இன்னும் கிடைக்கவில்லை!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான, வாக்குச்சீட்டுக்களை அச்சிடுவதற்கான நிதி, இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என அரச அச்சக மா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், அஞ்சல்மூல வாக்குப்பதிவுகளை, எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

340 உள்ளுராட்சி மன்றங்களின் அதிகார காலம், நாளை மறுதினம் நள்ளிரவுடன் நிறைவடைய உள்ளது.

இந்த நிலையில், உள்ளுராட்சி மன்றங்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து, பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும், மாகாண ஆளுநர்களுக்கும் இடையே நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் ஆராயப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles