Wednesday, January 21, 2026
22.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயிலில் கைவிடப்பட்ட குழந்தை: பெற்றோருக்கு பிணை

ரயிலில் கைவிடப்பட்ட குழந்தை: பெற்றோருக்கு பிணை

ரயிலில் குழந்தையைக் விட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெற்றோரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிணை கிடைத்ததும் இன்று இருவருக்கும் திருமணம் செய்து வைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குழந்தையின் பெற்றோர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

பண்டாரவளை நன்னடத்தை உத்தியோகத்தர் விடுத்த கோரிக்கையை அடுத்து, குழந்தையின் போசாக்கு தேவையை கருத்தில் கொண்டு குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, பண்டாரவளை நன்னடத்தை அதிகாரியின் கடுமையான கண்காணிப்பின் கீழ் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles