Thursday, November 27, 2025
23.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயாழில் போசாக்கின்மையால் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

யாழில் போசாக்கின்மையால் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு – குடத்தனை பகுதியில் பிறந்து 52 நாட்களேயான சிசுவொன்று போசனை குறைப்பாட்டால் உயிரிந்துள்ளது.

குறித்த குழந்தை யக்கமுற்ற நிலையி கடந்த திங்கட்கிழமை இரவு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 14 ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

இம்மரணம் தொடர்பில் தும்பளை திடீர் மரண விசாரணை அதிகாரி அன்ரலா விஞ்சன்தயான் விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

உடற்கூற்று பரிசோதனை கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற நிலையில், போதிய போசாக்கின்மை காரணமாக உயிரிழப்பு இடம்பெற்றதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles