Saturday, September 21, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாணவர்களில் 90 சதவீதமானோர் போதிய கல்வி - எண்கள் பற்றிய அறிவைப் பெறவில்லை

மாணவர்களில் 90 சதவீதமானோர் போதிய கல்வி – எண்கள் பற்றிய அறிவைப் பெறவில்லை

கொரோனா வைரஸ் பரவலின்போது, பாடசாலைகள் மூடப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், முதலாம் தர மாணவர்களில் 33 சதவீதமானோர் கைபேசிகளை பயன்படுத்தி விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்ததாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

64 சதவீதமானோர் நாளொன்றுக்கு ஒரு மணி நேரத்திற்கும் அதிக காலத்தை தொலைக்காட்சியைப் பார்ப்பதில் செலவு செய்துள்ளனர்.

அதேநேரம் 7 சதவீதமானோர் மூன்று மணித்தியாலத்திற்கு அதிகமாக தொலைக்காட்சியைப் பார்ப்பதில் செலவு செய்துள்ளதாகவும் கல்வி அமைச்சின் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலினம், கற்றல் ஊடகம், பாடசாலை வகைப்படுத்தல் மற்றும் வருமானம் மற்றும் இருப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த கணக்கெடுப்புக்கான மாதிரிகள், மாகாண மற்றும் பிராந்திய கல்வி அலுவலக அளவில் எழுமாறாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

2021 ஆம் ஆண்டளவில், 03 ஆம் தரத்தில் கல்வி கற்ற மாணவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 32 ஆயிரத்து 231 ஆகவும், கணக்கெடுக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை, 10 ஆயிரத்து 600 ஆகவும் இருந்துள்ளது.

கொரோனா காலத்தில் மாணவர்களின் கல்வித் தரம் கடுமையாகப் பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களில் 90 சதவீதமானோர் போதிய கல்வியறிவு அல்லது எண்கள் பற்றிய அறிவைப் பெறவில்லை என்றும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

கேட்டல், பேசுதல், கற்றல் மற்றும் எழுதுதல் உள்ளிட்ட பல பிரிவுகளின் மூலம் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

அதன்படி, 73 சதவீதமானோருக்கு கேட்கும் போக்கு இல்லை என்றும், 80 சதவீதமானோருக்கு பேசும் திறன் குறைவாக உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அந்த அறிக்கையின்படி, கற்றல் திறன் பெறாதவர்களின் சதவீதம் 63 சதவீதமாகவும் எழுதும் திறன் இல்லாதவர்கள் 66 சதவீதமாகவும் உள்ளனர்.

மேலும், வீட்டுக் கல்வியின் போது படித்த புத்தகங்கள் மற்றும் கற்றல் கருவிகள் குறித்து கேட்டபோது, 19 சதவீதமானோர் எந்த விதமான புத்தகத்தையும் பயன்படுத்தவில்லை என்பது தெரியவந்தது.

அத்துடன், குழந்தைகளின் கற்றல் தொடர்பான பிற பின்னணி காரணங்கள் ஆராயப்பட்டுள்ளன.

சுமார் 25 சதவீதமானோர், ஆரம்பக் கல்வியில் எந்தப் பயிற்சியும் இல்லாத ஆசிரியர்களிடமிருந்து கற்றுக்கொண்டதாக தெரியவந்தது.

மேலும், 13 சதவீத மாணவர்கள் தினசரி பிரதான உணவு வேளைகளில், ஒருவேளை உணவை எடுத்துக்கொள்ளவில்லை என்றும்,ஒரு சதவீதமானோர் காலை மற்றும் மதிய உணவு இரண்டையும் எடுத்துக் கொள்வதில்லை என்றும் தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles