Friday, June 12, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டு'பூரு மூனா' கைது

‘பூரு மூனா’ கைது

பல கொலைகள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த ‘பூரு மூனா’ எனப்படும் ரவிந்து சங்கட சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் அவிசாவளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அவர் வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி ஹங்வெல்ல பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளரை சுட்டுக் கொன்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

கடந்த 24ஆம் திகதி, சந்தேகநபர் வெளிநாடு செல்ல முற்பட்ட போது கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கைது செய்து காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், ​​இரு பிக்குகளின் உதவியுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இவர் பல மனித படுகொலை பலவற்றுக்கு பிரதான சூத்திரதாரியாக இவர் செயற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles