Monday, June 23, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயாழ். வைத்தியசாலையில் இலவச கண்புரை சத்திரசிகிச்சை

யாழ். வைத்தியசாலையில் இலவச கண்புரை சத்திரசிகிச்சை

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோயாளிகளுக்கு யாழ். போதனா வைத்தியசாலையில் நன் கொடையாளர்களின் உதவியுடன் இலவச கண்புரை சத்திரசிகிச்சை நடைபெறவுள்ளது.

இதற்கான நோயாளர்களை தெரிவு செய்யும் மூன்றாவது கண் பரிசோதனை முகாம்கள் நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் அனலைதீவு பிரதேச மருத்துவமனை, அம்பன் பிரதேச மருத்துவமனை மற்றும் மருதங்கேணி பிரதேச மருத்துவமனைகளில் நடைபெறவுள்ளது.

கண்புரை சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ள நோயாளர்கள் இந்தக் கண் பரிசோதனை முகாம்களில் கலந்து கொண்டு தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles