Monday, June 23, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்து ஆசனங்களை ஒன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வாய்ப்பு

பேருந்து ஆசனங்களை ஒன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வாய்ப்பு

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் நீண்ட தூர பயணங்களுக்காக இணையத்தளம் வாயிலாக ஆசன முன்பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் தெரிவித்தார்.

அத்துடன், sltb.express.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் வாயிலாக நெடுந்தூர பயணங்களுக்கான ஆசன முன்பதிவினை மேற்கொள்ள முடியும்.

1315 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் வாயிலாகவும் ஆசன முன்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles