Monday, August 25, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉரக் கப்பலொன்று நாட்டை வந்தடைந்தது

உரக் கப்பலொன்று நாட்டை வந்தடைந்தது

பெரும் போகத்துக்குத் தேவையான TSP இரசாயன உரம் அடங்கிய கப்பலொன்று இன்று அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

அதன்படி சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட MV INCE PACIFIC என்ற கப்பல் 36,000 மெட்ரிக் டன் இரசாயன உரத்தைச் சுமந்து நாட்டை வந்தடைந்துள்ளது.

இது போன்ற மற்றொரு கப்பல் எதிர்வரும் காலங்களில் உரத்துடன் நாட்டை வந்தடையும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த TSP உரமானது ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் USAID நிறுவனங்களின் பங்களிப்புடன் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

விவசாய துறை பரிந்துரைகளின்படி விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு 55 கிலோ கிராம் TSP உரத்தை இலவசமாக வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles