Sunday, February 1, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇராணுவ முகாமிலிருந்து காணாமல் போன துப்பாக்கி கண்டுபிடிப்பு

இராணுவ முகாமிலிருந்து காணாமல் போன துப்பாக்கி கண்டுபிடிப்பு

பனாகொட இராணுவ முகாமில் இருந்து துப்பாக்கி மற்றும் 3 மகசீன்களை திருடிய இராணுவ சார்ஜன்ட் மற்றும் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 3ம் திகதி பாதுகாப்பு அறையில் கடமையாற்றிய இராணுவ வீரருக்கு வழங்கப்பட்ட 90 தோட்டாக்கள் அடங்கிய 3 மகசீன்கள் திருடப்பட்டன.

சம்பவம் தொடர்பில் ஹோமாகம பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

ஹோமாகம மாகம்மன பிரதேசத்தில் உள்ள மயானத்திற்கு அருகில் வைத்து சந்தேகநபர்கள் இருவரும் நேற்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் இராணுவ சிப்பாய் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை திருடியதுடன், துப்பாக்கியை வைத்திருந்தமை மற்றும் மறைப்பதற்கு உதவிய குற்றத்திற்காக இராணுவ சார்ஜன்ட் கைது செய்யப்பட்டார்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருடப்பட்ட துப்பாக்கி மற்றும் 90 தோட்டாக்கள் அடங்கிய 3 மெகசின்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

முன்னாள் இராணுவ சிப்பாய் 30 வயதுடையவர் எனவும் அவர் மித்தெனிய பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

36 வயதான சார்ஜன்ட் வயங்கொட பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் இருவரும் இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles