ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்றவற்றின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம், சுமார் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
மெட்டா நிறுவனம், கடந்த 4 மாதங்களில் ஊழியர்களை பணிநீக்கம் செய்வது இது இரண்டாவது முறையாகும்.
கடந்த ஆண்டு (2022) நவம்பரில், மெட்டா நிறுவனம் அதன் துணை நிறுவனங்களில் சுமார் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
செயல்திறனை அதிகரிக்க கடினமான முடிவு எடுக்கப்படுவதாக மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சக்கர்பெர்க் தெரிவித்தார்.