Friday, January 30, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாணவர்கள் மீது தாக்குதல்: அதிபர்,ஆசிரியர்கள் உட்பட பலர் கைது

மாணவர்கள் மீது தாக்குதல்: அதிபர்,ஆசிரியர்கள் உட்பட பலர் கைது

கண்டி, பொக்காவல தனியார் பாடசாலையில் மாணவர்களைக் கொடூரமாகத் தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் குறித்த பாடசாலையின் அதிபர் மற்றும் மூன்று ஆசிரியர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பாடசாலையின் மாணவர் விடுதியி்ல் மாணவர்களின் ஒழுக்காற்று பிரச்சினை காரணமாகவே மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எவ்வாறெனினும் இது தொடர்பாகக் கண்டி பிரதேச சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதான நபர்களில் பாடசாலை விடுதி பாதுகாவலரும் ஒருவர் ஆவார்.

சந்தேக நபர்கள் கண்டி, நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மார்ச் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles