பிலியந்தலை-சுவாரபொல பகுதியில் உள்ள வீடொன்றில் கைகள் துணியால் கட்டப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில்இ குறித்த பெண்ணின் சடலம் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
27 வயது திருமணமான பெண்ணொருவரே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கணவருடன் இடம்பெற்ற தகராறு காரணமாக, கோபமடைந்து தாய் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில், இவ்வாறு சந்தேகத்திற்கிடமான முறையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் களுபோவில போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று (15) இடம்பெறவுள்ளது.