Tuesday, September 23, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபூனை கடித்ததால் உயிரிழந்த பெண்

பூனை கடித்ததால் உயிரிழந்த பெண்

பூனை கடித்ததன் காரணமாக இடது காலில் ஏற்பட்ட காயத்தினால் கிருமி தொற்றுக்கு உள்ளான மூன்று பிள்ளைகளின் தாயொருவர் உயிரிழந்துள்ளார்.

தல்பே கிழக்கு பிரதேசத்தை சேர்ந்த எழுபத்தைந்து வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை கடந்த 13 ஆம் திகதி காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி மகேஷ் தர்மரத்னவினால் நடைபெற்றது.

உயிரிழந்த பெண் வீட்டின் மாடியிலிருந்து கீழே இறங்கியபோது வீட்டுப் பூனை இடது காலில் கடித்துள்ளது.

அவர் அதை கவனிக்காது விட்டுள்ளதுடன், பின்னர் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

ஹபராது களுகல வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கடந்த 28 ஆம் திகதி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 13 ஆம் திகதி அவர் உயிரிழந்துள்ளார்.

பூனை கடித்ததால் ஏற்பட்ட காயத்தில் இருந்து கிருமிதொற்று ஏற்பட்டதால் அவர் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles