Thursday, March 20, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தல் மீண்டும் பிற்போகும் சாத்தியம்

தேர்தல் மீண்டும் பிற்போகும் சாத்தியம்

போதியளவு நிதி இல்லாததால் வாக்குச் சீட்டு அச்சடிக்க முடியாது என அரசு அச்சக மா அதிபர் கூறினால், தபால் மூலம் வாக்கெடுப்பு தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு கூடி முடிவெடுக்க வேண்டும் என அந்த ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்தார்.

வாக்குச் சீட்டுகள் மற்றும் தேர்தலுக்குத் தேவையான பணம் கிடைக்காத காரணத்தால் தபால் வாக்குகள் மட்டுமின்றி ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சித் தேர்தலையும் ஒத்திவைக்க நேரிடும் என்று தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களிப்பை இம்மாதம் 28, 29, 30 மற்றும் 31ஆம் திகதிகளில் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.

தபால் வாக்குச் சீட்டுகள் இம்மாதம் 21ஆம் திகதி தபால் நிலையத்துக்கு வழங்கப்பட உள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles