சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதியின் கீழ் வழங்கப்படும் முதல் தவணை மார்ச் 22 ஆம் திகதிக்குள் கிடைக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, முதல் தவணையாக சுமார் 330 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
2.9 பில்லியன் ரூபா கடன் வசதியை இலங்கை பெறுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அனுமதி வழங்கியதன் பின்னர் இலங்கைக்கு கடன் வசதி கிடைக்கும்.