Tuesday, August 5, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹரக் கட்டா - குடு சலிந்து இன்று இலங்கைக்கு

ஹரக் கட்டா – குடு சலிந்து இன்று இலங்கைக்கு

மடகஸ்காரில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களான ஹரக் கட்டா எனப்படும் நதுன் சிந்தக மற்றும் குடு சலிந்து எனப்படும் சலிந்து மல்ஷித ஆகியோர் இன்று இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

அவர்களை அழைத்து வருவதற்காக இலங்கையில் இருந்து விசேட பொலிஸ் குழு ஒன்று மடகஸ்கார் சென்றிருந்தது.

ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோர் பெப்ரவரி 12 ஆம் திகதி மடகஸ்காருக்கு தனியார் ஜெட் விமானம் மூலம் சென்ற போது, சர்வதேச பொலிஸாரால் பிறப்பிக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கையின்படி கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஹரக் கட்டாவின் மனைவியும் அவரது தந்தையும் அடங்குவர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles