மாலைதீவு தொடர்பில் தாம் ஜேர்மனியில் தெரிவித்த கருத்து சமூக வலைத்தளங்கள் ஊடாக தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எனினும், ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பேர்லினில் இடம்பெற்ற சுற்றுலா நிகழ்ச்சியொன்றில், மாரைதீவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒப்பீடு செய்த அமைச்சர், நாட்டிலுள்ள சுற்றுலாத் தலங்கள் குறித்து கருத்து வெளியிட்டார்.
இருப்பினும், மாலைதீவு சுற்றுலாத்துறை அமைச்சர் அப்துல்லா மவ்சூம் மற்றும் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் அவரது அறிக்கைக்கு எதிராக ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டுப் பதிலளித்தனர்.
”கடந்த 3 ஆண்டுகளில் மாலைதீவு உலகின் சிறந்த சுற்றுலாத் தலமாக மாறி விருதையும் பெற்றுள்ளது. அந்த வகையில் பொறாமை அல்லது சந்தேகம் இருந்தால் மீண்டும் மீண்டும் கண்ணாடி முன் சென்று கேளுங்கள்” என மாலைதீவு சுற்றுலாத்துறை அமைச்சர் அப்துல்லா மவ்சூம் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையின் பின்னர், சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக நேற்று இதனை தெளிவுபடுத்தினார்.
சுற்றுலா வர்த்தகம் தொடர்பாக அயலவருடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகவும் அதில் அவர் சுட்டிக்காட்டியுள்ளது.