43 வகையான புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளை அவசரமாக கொள்வனவு செய்வது தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இந்த மருந்துகளை அதிக விலைக்கு கொள்வனவு செய்ய பரிந்துரைக்கப்பட்டதாக வெளியான ஊடகச் செய்திகள் தொடர்பான உண்மைகளை தெளிவுபடுத்துவதற்காக சுகாதார அமைச்சில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதுவரை இதுதொடர்பில் எந்த பரிந்துரையும் செய்யப்படவில்லை. இந்த கொள்முதல் தொடர்பாக முதற்கட்ட பணிகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. செயலாளர் தலைமையில் கூடும் டெண்டர் குழுவில் ஒரு குறிப்பிட்ட பரிந்துரை செய்யப்படுகிறது. இது தொடர்பாக கணக்காய்வாளர் நாயகம் மற்றும் நிதியமைச்சின் பிரதிநிதிகளுடன் பல நாட்களாக விவாதித்து வருகிறேன். சப்ளையர்களால் வழங்கப்படும் விலைகள் அதிகமாக இருந்தால்,அதைப் பற்றி விவாதிப்போம் என்றார்.