குரைத்துக் கொண்டே இருந்ததால் பக்கத்து வீட்டு நாயை வயோதிப பெண் ஒருவர் உயிருடன் புதைத்த சம்பவம் பிரேசிலில் பதிவாகியுள்ளது.
பிரேசிலில் ப்ளானுரா பகுதியை சேர்ந்த 82 வயது வயோதிப பெண்ணின் வீட்டின் அருகே உள்ள 33 வயது பெண் வளர்க்கும் நீனா என்ற செல்ல நாயையே இவ்வாறு புதைத்துள்ளார்.
அது எப்போதும் இரவில் குரைத்துக் கொண்டே இருப்பதால் தூங்க முடியாமல் எரிச்சல் அடைந்த பெண், அந்த நாயைத் தனது தோட்டத்திலேயே இரவோடு இரவாக குழி தோண்டி புதைத்துள்ளார்.
திடீரென தனது நாய் காணாமல் போனதால் பரிதவித்துப் போன 33 வயது பெண், இது குறித்து சந்தேக நபரிடம் கேட்கவே, அவர் நடந்ததைக் கூறியுள்ளார்.
சுமார் ஒன்றரை மணி நேரமாக குழிக்குள் பரிதவித்த நாய் உயிருடன் மீட்கப்பட்டது.
இது குறித்து நீனாவின் உரிமையாளர் விசாரித்த போது,
‘அந்த நாய் இந்தப் பக்கம் இனி வரவே கூடாது’ என மிரட்டியுள்ளார்.
பின்னர் குறித்த பெண் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். அதற்கமைய வயோதிப பெண்ணிடம் பொலிஸார் விசாரித்த போது,
மீண்டும் குரைத்தால் மறுபடியும் குழி தோண்டி புதைப்பேன்’ என்று பயமின்றி எச்சரித்துள்ளார்.
விலங்குகளிடம் வன்முறையாக நடந்துகொண்டதற்காக குறித்த வயோதிப பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.