Tuesday, August 5, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கு மீண்டும் உதவும் உலக வங்கி

இலங்கைக்கு மீண்டும் உதவும் உலக வங்கி

ஆரம்ப சுகாதார சேவைகளுக்காக இந்த ஆண்டு உலக வங்கியிடமிருந்து 65 மில்லியன் டொலர் கிடைக்கப் பெறவுள்ளதாக சுகாதார பராமரிப்பு முறையை வலுப்படுத்துவது தொடர்பான உலக வங்கியின் பணிப்பாளர் வைத்தியர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சுகாதார மேம்பாட்டு பணியகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் ஆரம்ப சுகாதார பராமரிப்பு முறையை வலுவூட்டும் உலக வங்கியின் திட்டமானது புத்தளம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் மற்றும் ஆணைமடு வைத்தியசாலை ஆகியவற்றுடன் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.

ஆரம்ப சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான உலக வங்கி திட்டமானது வைத்தியசாலைகள் மற்றும் கிளினிக்குகள் மட்டத்தில் இத்தகைய மருத்துவ சோதனைகளை மேற்கொண்டு 198,000 நபர்களின் தகவல்களை டிஜிட்டல் தகவல் கட்டமைப்பில் சேர்க்க முடிந்துள்ளது.

மேலும், வைத்தியசாலையுடன் இணைந்த சுகாதாரப் பாதுகாப்புக் குழுக்கள் 3 கட்டங்களை நிறைவு செய்ய வேண்டும்.

அதற்காக இவ்வாண்டு உலக வங்கியிடமிருந்து 65 மில்லியன் டொலரைப் பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்பார்ப்பதாக ஆரம்ப சுகாதார பராமரிப்பு முறையை வலுப்படுத்துவது தொடர்பான உலக வங்கியின் பணிப்பாளர் வைத்தியர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles