Sunday, August 10, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச வருமானம் அதிகரித்தால் முதலில் அரச ஊழியர்களுக்கே நிவாரணம் வழங்கப்படும்

அரச வருமானம் அதிகரித்தால் முதலில் அரச ஊழியர்களுக்கே நிவாரணம் வழங்கப்படும்

எதிர்காலத்தில் அரச வருமானம் அதிகரிக்கும் பட்சத்தில் முதலில் அரச ஊழியர்களுக்கே நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (14) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரச ஊழியர்களில் 10 சதவீதம் பேர் மட்டுமே இந்த வரி திருத்தத்துக்கு உட்பட்டுள்ளனர். ஏனைய 90 சதவீத அரச ஊழியர்களுக்கு இந்த வரி பொருந்தாது. எனவே, அரசின் வருவாய் அதிகரித்தால், இந்த சீர்திருத்தங்கள் மூலம் முதலில் அரச ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவர்களின் கொடுப்பனவுகள் போன்றவற்றின் வரிவிதிப்பு குறித்து தனி குழு ஆய்வு செய்து வருகிறது என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles