அரசாங்கத்தின் புதிய வரி கொள்கைக்கு எதிராக இன்று (14) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
அத்துடன், நாளை (15) காலை 9 மணி முதல் சட்டப்படி வேலைசெய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக, இலங்கை மின்சார சபை தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
மேலும், திட்டமிட்டபடி இன்று (14) நள்ளிரவு முதல் ஒருநாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தொடரூந்து தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.