Thursday, July 10, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுO/L பரீட்சை நடைபெறும் திகதியில் மாற்றம்?

O/L பரீட்சை நடைபெறும் திகதியில் மாற்றம்?

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள வழமையான பரீட்சைகள் தாமதமடைவதற்கு இடமுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை வெற்றிகரமாக நடாத்தப்பட்டு நிறைவடைந்த போதிலும், இரண்டு பரீட்சைகளுக்கு இடையிலான மூன்று மாத இடைவெளி குறைக்கப்பட்டமையினால் விடைத்தாள் மதிப்பீட்டு பணி இரண்டு வாரங்கள் தாமதமாகியுள்ளதாக அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் குறிப்பிட்டார்.

உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடுவதில் தாமதம் ஏற்படுவதால், பெறுபேறுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுகின்றது.

இதன் காரணமாக சாதாரண தரப் பரீட்சையை நடத்தும் திகதியில் மாற்றம் ஏற்படக்கூடுமென அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles