Wednesday, November 26, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டு350 கிராம் கொக்கெய்னுடன் வெளிநாட்டவர் கைது

350 கிராம் கொக்கெய்னுடன் வெளிநாட்டவர் கைது

பிரேசிலில் இருந்து இலங்கை வந்த வெளிநாட்டவர் ஒருவர் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 350 கிராம் கொக்கெய்னுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வெளிநாட்டவர் பிரேசிலில் இருந்து வந்துள்ள போதிலும், அவர் மெசிடோனிய பிரஜை என இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (13) சந்தேகநபரின் பயணப் பொதியை பரிசோதித்த போது சட்டவிரோத போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தேக நபர் கட்டார் எயார்வேஸ் விமானமான QR664 மூலம் காலை 8.30 மணியளவில் இலங்கை வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபரிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட கொக்கேயின் சந்தைப் பெறுமதி 17 மில்லியன் ரூபா என சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் 54 வயதுடையவர் எனவும் அவர் முதல் தடவை இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles