பொநலவாய தின கொண்டாட்டங்கள் இன்று (13) லண்டன் மால்பரோ ஹவுஸில் நடைபெறவுள்ளது.
அதற்கமைய, குறித்த நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கலந்து கொள்வார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் மார்ச் 15ஆம் திகதி லண்டன் மால்பரோ ஹவுஸில் உள்ள பொதுநலவாயத் தலைமையகத்தில் நடைபெறும் 22ஆவது பொதுநலவாய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் பங்கேற்க உள்ளார்.
பொதுநலவாய அபிவிருத்தி விவகாரங்களுக்கான இராஜாங்க செயலாளர் ஜேம்ஸ் க்ளெவர்லி, பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லண்ட் மற்றும் பொதுநலவாய அபிவிருத்தி விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் ஆன் மேரி ஆகியோருடன் இந்தோ-பசிபிக் பகுதியில் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ள வெளிவிவகார அமைச்சர் திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.